வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நாடு எங்கே செல்கிறது, யாரை நம்பி பெண் பிள்ளைகளை விடுவது என்று தெரியவில்லை.
நாடு எங்கே செல்கிறது, யாரை நம்பி பெண் பிள்ளைகளை விடுவது என்று தெரியவில்லை.
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வயது தங்கைக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்த 13 வயது அண்ணன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண், கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு 13 வயதில் மகனும் 5 வயது மகளும் உள்ளனர். அந்தப் பெண் நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். காலையில் வேலைக்கு செல்லும் அவர் இரவு தான் வீடு திரும்புவார்.சமீப காலமாக பெரும்பாலான நாட்களில் அவரது 5 வயது மகள் அழுது கொண்டே இருந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது அவர் எதுவும் சொல்லவில்லை. பின்னர் அந்த பெண் தீர விசாரித்ததில் மகனே தனது மகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆனால் 5 வயது சிறுமி தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் தினமும் அழுதுள்ளார்.இதை தொடர்ந்து சிறுமியின் தாய் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் 13 வயது அண்ணன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு எங்கே செல்கிறது, யாரை நம்பி பெண் பிள்ளைகளை விடுவது என்று தெரியவில்லை.
நாடு எங்கே செல்கிறது, யாரை நம்பி பெண் பிள்ளைகளை விடுவது என்று தெரியவில்லை.