உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பாலத்தில் கீறல் கண்ணாடி அகற்றம் புதிதாக பொருத்தி சீரமைப்பு

பாலத்தில் கீறல் கண்ணாடி அகற்றம் புதிதாக பொருத்தி சீரமைப்பு

நாகர்கோவில்:சுத்தியல் விழுந்ததால் கீறல் விழுந்த கண்ணாடி அகற்றப்பட்டு கன்னியாகுமரி கண்ணாடி பாலம் சீரமைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைத்து உருவாக்கப்பட்ட கண்ணாடி பாலம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் பராமரிப்பு பணியின் போது சுத்தியல் தவறி கீழே விழுந்ததில் ஒரு கண்ணாடியில் லேசான கீறல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் அதை மிதிக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கீறல் கண்ணாடி அகற்றப்பட்டு புதிய கண்ணாடி பொருத்தப்பட்டது. கண்ணாடி பாலத்தின் உறுதி தன்மையில் சுற்றுலாப் பயணிகள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என்று கலெக்டர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை