உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி

போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி

நாகர்கோவில்:நீதிமன்றத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி போலி ஆணை வழங்கி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக குளச்சலை சேர்ந்த கணவன், மனைவி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உரப்பன விளையைச் சேர்ந்தவர் ஐயப்பன் 55. இவர் எஸ்.பி. அலுவலகத்தில் தந்த புகாரில் கூறியிருந்ததாவது: எங்களது பகுதியைச் சேர்ந்த ரம்யா 34, என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் பணியாற்றி வருவதாகவும் அங்கு எனது இரண்டு மகள்களுக்கும் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ. 15 லட்சம் பெற்றார். பின்னர் எங்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். சில நாட்களில் பணி நியமன நியமன ஆணை வந்துவிடும் என்று தெரிவித்தனர். அந்த ஆணை வந்தவுடன் ஆய்வு செய்த போது அதுபோலி என்பது தெரியவந்தது. இதில்ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ரம்யா, கணவர் சுரேஷ் 38, மற்றும் பரப்பியை சேர்ந்த அனுஷ்யா 35 ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய விபின் மற்றும் ரேணுகாவைதேடி வருகின்றனர். விசாரணையில் இவர்கள் ஐந்து பேரும் இதுபோல 30க்கும் மேற்பட்டவர்களிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை