உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / திருமணத்துக்கு சம்மதித்த பெண் காதலனுடன் சென்று திருமணம்

திருமணத்துக்கு சம்மதித்த பெண் காதலனுடன் சென்று திருமணம்

நாகர்கோவில் : நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டிலிருந்து மாயமாகி காதலனுடன் திருமணம் செய்த பெண் அந்த போட்டோவை நிச்சயிக்கப்பட்ட இளைஞருக்கும் வீட்டுக்கும் அனுப்பி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சியை சேர்ந்தவர் ஷைனி பிரியா 30. கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இரணியல் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்கு சைனி சம்மதம் தெரிவித்து ஏற்பாடுகள் நடைபெற்றன.அழைப்பிதழ் கொடுப்பது முதல் திருமண வேலைகள் அனைத்திலும் பங்கு பெற்ற ஷைனி பிரியா ஜூலை 5ல் வீட்டில் இருந்து மாயமானார். அவரது அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தக்கலை போலீசில் சகோதரர் சஞ்சீவ் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று காலை ஷைனியின் பெற்றோர், உறவினர்களுக்கும், திருமணம் நிச்சயக்கப்பட்ட இளைஞருக்கும் காதலனுடன் மணக்கோலத்தில் இருக்கும் போட்டோவை ைஷனி அலைபேசியில் அனுப்பி வைத்தார்.கோயிலில் வைத்து தங்கள் திருமணம் நடைபெற்றதாகவும் தன்னை மன்னித்து விடும்படியும் அதில் தெரிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S Ramkumar
ஜூலை 09, 2025 10:14

கல்யாணத்துக்கு இவ்வளவு செலவை யார் திருப்பி கொடுப்பது


Natarajan Ramanathan
ஜூலை 09, 2025 05:36

நம்ப வைத்து கழுத்தை அறுத்த பெண்ணை கைதுசெய்யவேண்டும். இதையே ஒரு ஆண் செய்திருந்தால் என்ன நடவடிக்கை எடுக்குமோ அதையே இந்த பெண் விஷயத்திலும் காவல்துறை செய்யவேண்டும்.


பாபு
ஜூலை 08, 2025 23:15

இந்த கல்யாணத்துல சம்மதம் தெரிவிக்காம இருந்துருக்கலாம்.பாவம் உங்களால இன்னொருத்தர் கஷ்டப்படுறார்...


ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 15:37

மனசாட்சி உறுத்தவில்லையா?


PR Makudeswaran
ஜூலை 09, 2025 11:05

மனச்சாட்சி அதை மறந்து ரொம்ப நாளாகிறதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை