மேலும் செய்திகள்
அறுவடைக்கு தயார் நிலையில் உளுந்து
08-Jan-2025
கிருஷ்ணராயபுரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வேண்டுகோள்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில், 1,000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, விளை நிலங்களில் நெற்கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.சில இடங்களில், அறுவடை இயந்திரம் கொண்டு நெற் பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், 62 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை ஒன்று, 1,350 ரூபாய்க்கு (ஆந்திரா பொன்னி) விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு விலை கட்டுப் படியாகவில்லை.கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறந்தால், விவசாயிகளுக்கு ஓரளவு லாபத்துடன் நெல் மூட்டைகள் விற்பனை செய்ய முடியும். எனவே, இப்பகுதியில் விரைந்து அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
08-Jan-2025