உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டமுகாம்; நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டமுகாம்; நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டமுகாம்; நலத்திட்ட உதவி வழங்கல்குளித்தலை:குளித்தலையில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். இதையடுத்து அவர், கூறியதாவது:குளித்தலை வட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகள், வி.ஏ.ஓ., அலுவலகம், வட்டார பொது சுகாதார மைய கட்டடம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், சத்துணவு கூடங்கள், பள்ளிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திம்மாச்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், குடிநீர் வசதி, கழிவறை வசதி, மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யும் சமையல் கூடம் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் உணவு பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.விவசாய கூலியாக உள்ள பட்டியல் இன மக்களை, சொந்த நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள வைக்க, தாட்கோ மானியம் மூலம் நன்னிலம் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பயன் பெற்ற மகளிர் ஒருவர், மருதுார் பகுதியில் பாய் தயார் செய்யும் கோரை விவசாயம் மேற்கொள்வதையும், அதன் மூலம் அவருக்கு கிடைக்கும் மகசூல் மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்தும் கேட்டறியப்பட்டது.இவ்வாறு கூறினார்.முகாமில், 37 பயனாளிகளுக்கு, 13.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ