நடு வழியில் மின் கம்பம் இருப்பதால் மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாலராஜபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆண்டிப்பாளையம் காலனி உள்ளது. இப்பகுதிக்கு செல்லும் வழியில், நடுவில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பல வீடுகளுக்கு, மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின்கம்பம் நடு வழியில் இருப்பதால், அந்த பகுதி மக்கள் விரைவாக செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்கம்பம் இருப்பதால் அவசர காலத்திற்கு, மருத்துவ சிகிச்சைக்கு நோயாளிகளை வாகனங்களில் அழைத்து செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் மக்களுக்கு பாதிப்பாக இருக்கும் மின்கம்பத்தை மாற்றி விட்டு, அதற்கு மாற்று ஏற்பாடாக அருகில் காலி இடத்தில் மின் கம்பம் நிறுவுவதற்கான நடவடிக்கையில் புலியூர் மின்சார வாரிய அலுவலகம் ஈடுபட வேண்டும்.