மேலும் செய்திகள்
அரசு மாணவியர் விடுதிகளில் பொங்கல் பண்டிகை போட்டி
13-Jan-2025
கரூர், : கரூரில் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லுாரி, மாணவியர்களை விரட்டி, கிண்டல் அடிப்பதை வாலிபர்கள் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். கரூரில் இருந்து நாமக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவியர் செல்கின்றனர். இவர்களை அழைத்து செல்ல காலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி பஸ்கள், கரூர் மனோகரா கார்னர், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர் மற்றும் வெங்கமேடு பகுதியில் நிறுத்தப்படுகிறது.இதில், ஏறி பள்ளி, கல்லுாரிக்கு செல்ல மாணவியர் நாள்தோறும் காலை, 7:00 மணி முதல் குறிப்பிட்ட இடங்களில் காத்திருக்கின்றனர்.அப்போது சில வாலிபர்கள், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவியரை கிண்டல் செய்தும், காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியும் தொல்லை தருகின்றனர்.இதை தட்டி கேட்க முடியாமல் மாணவியர் உடன் வரும், பெற்றோர், உறவினர்கள் தவிக்கின்றனர். இதனால், பெண்களை துாரத்தும் வாலிபர்களின் தொல்லை கரூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக, கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படும் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியரை குறி வைத்து, வாலிபர்கள் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.இதுகுறித்து, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: கரூர் நகரில் பள்ளி, கல்லுாரி, வேலை செல்லும் பெண்களை சுற்றும், வாலிபர் கும்பல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக, படிக்கும் பெண்களை குறி வைத்து, காலை மற்றும் மாலை நேரங்களில், வாலிபர்கள் சிலர் காத்திருக்கின்றனர்.பெண்களை வீடு வரை துாரத்தி தொந்தரவு செய்கின்றனர். இதை கண்டிக்க முடியவில்லை. போலீசில் புகார் கொடுத்தாலும், பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால், கரூர் நகரப்பகுதிகளில், பள்ளி, கல்லுாரி பஸ்கள் வந்து செல்லும் இடங்களில் போலீசார், மாறுவேடத்தில் சென்று, மாணவியரை தொந்தரவு செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.
13-Jan-2025