தடுப்பு சுவர்களில் ரிப்ளக்டர் இல்லை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கரூர், : கரூர் நகரில் கோவை சாலை, ஈரோடு சாலை, திருச்சி சாலை, வெங்கமேடு சாலை ஆகிய பகுதி களின் நடுவே, விபத்துகளை தடுக்க, தற்காலிக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.அதில், சில இடங்களில் வாகன ஒட்டிகளுக்கு தெரியும் வகையில், தடுப்பு சுவர் மீது கருப்பு, வெள்ளை நிறத்தில் கோடு வரையப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பு சுவர் துவங்கும் இடம், நிறைவடையும் இடங்களில், இரவு நேரத்தில் ஒளிரும் வகையில், சிவப்பு நிறத்தில் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் நடுவே, தற்காலிக தடுப்பு சுவர் இருப்பது தெரியவில்லை. சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக தடுப்பு சுவரில், இரவு நேரத்தில் ஒளிரக்கூடிய, சிவப்பு விளக்குகளை பொருத்த, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.