உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் நாளை முதல் தேசிய குடற்புழு நீக்க முகாம்

கரூர் மாவட்டத்தில் நாளை முதல் தேசிய குடற்புழு நீக்க முகாம்

கரூர் மாவட்டத்தில் நாளை முதல் தேசிய குடற்புழு நீக்க முகாம்கரூர்:கரூர் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க முகாம் நாளை (10ம் தேதி) முதல், 17 வரை நடக்கிறது.இதில், 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட இரண்டு லட்சத்து, 39 ஆயிரத்து, 236 பேருக்கும், 20-- 30 வயதுடைய, 80 ஆயிரத்து, 627 பெண்கள் (கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து பிற பெண்களுக்கு) ஆகியோருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக மாத்திரை வழங்கப்படும். பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு, அங்கன்வாடி பணியாளர்களின் மூலமாக மையத்திற்கு அழைத்து வந்து, குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். ரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும். குடற்புழு தாக்கத்தினால், உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவ, மாணவியரின் பள்ளி வருகை பாதிக்கப்படாமல் தவிர்க்கப்படும்.இத்தகவலை, கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ