உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேல்நிலை குடிநீர் தொட்டி படிக்கட்டுசேதம்: மேலே ஏற முடியாத ஊழியர்கள்

மேல்நிலை குடிநீர் தொட்டி படிக்கட்டுசேதம்: மேலே ஏற முடியாத ஊழியர்கள்

மேல்நிலை குடிநீர் தொட்டி படிக்கட்டுசேதம்: மேலே ஏற முடியாத ஊழியர்கள்கரூர்:கரூர் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டியின் படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளது. இதனால், மேல்நிலை தொட்டியை பராமரிக்க, மேலே ஏற முடியாமல், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி, 40வது வார்டு ராயனுார் சாலையில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்பாட்டுக்காக, ராயனுார் சாலையில், இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, குடிநீர் மேல்நிலை தொட்டி, சில ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்டது.அதன் மூலம், ராயனுார் சாலையில் உள்ள, வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டியில், பராமரிப்பு பணிக்காக கட்டப்பட்ட படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு, படிக்கட்டுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால், மேல்நிலை குடிநீர் தொட்டியில், பராமரிப்பு பணிக்காக மேலே ஏறி செல்ல முடியாமல், மாநகராட்சி ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, ராயனுார் சாலை பகுதியில் உள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டியின் படிக்கட்டுகளை, சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ