உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்சித்தா பிரிவு அமைக்க வேண்டுகோள்

புன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்சித்தா பிரிவு அமைக்க வேண்டுகோள்

புன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்சித்தா பிரிவு அமைக்க வேண்டுகோள்கரூர்:புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதிதாக அரசு சித்தா மருத்துவ பிரிவு தொடங்கி சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.க.பரமத்தி ஒன்றியத்தில், சின்னதாராபுரம், க.பரமத்தி, புன்னம், காசிபாளையம், கார்வழி, விசுவநாதபுரி, தும்பிவாடி ஆகிய, ஏழு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், இவற்றின் கீழ், 22 துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. அதில், சின்ன தாராபுரம், க.பரமத்தி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்பு நேரத்தில், நிலவேம்பு கசாயம் பெற நோயாளிகள் வருகை அதிகரித்தது. மேலும், இயற்கை மருத்துவ பிரிவில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, புன்னத்தில் சித்தா பிரிவு தொடங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்று வட்டாரங்களில் இருந்து பலவித நோய்களுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். அங்கு, ஆயுர்வேதிக், ஹோமியோபதி, சித்தா மருத்துவ பிரிவு என எதுவுமே இல்லை. இதனால், அலோபதி மருத்துவத்திலேயே மக்கள் சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது. சித்தா மருத்துவ பிரிவு தொடங்க வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ