சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சாலை மறியல் போராட்டம்
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சாலை மறியல் போராட்டம் கரூர்:-கரூரில், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 13 பேர் கைது செய்யப்பட்டனர்.கரூர் கலெக்டர் அலுவலகம் முன், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசகுமார் தலைமை வகித்தார். ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தியது போன்று இங்கும் அமல்படுத்தக் வேண்டும். பிற மாநிலங்கலில் சி.பி.எஸ்., திட்ட ஊழியர்களுக்கு வழங்குவது போல் பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களில் ஆறு பெண்கள் உள்பட, 13 பேரை போலீசார் கைது செய்தனர்.