உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூட்டு குடிநீர் குழாய் விரிசல் வீணாகி செல்லும் தண்ணீர்

கூட்டு குடிநீர் குழாய் விரிசல் வீணாகி செல்லும் தண்ணீர்

கூட்டு குடிநீர் குழாய் விரிசல்வீணாகி செல்லும் தண்ணீர்கிருஷ்ணராயபுரம், அக். 4-மேட்டு மகாதானபுரம், இரட்டை வாய்க்கால் வழியாக செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய் விரிசல் காரணமாக காவிரி நீர் வீணாகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து வையம்பட்டி வரை, காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பல கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு காவிரி நீர் கிடைக்கிறது. இந்நிலையில், மேட்டு மகாதானபுரம் இரட்டை வாய்க்கால் வழியாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் விரிசல் ஏற்பட்டு, அதன் வழியாக அதிகமான தண்ணீர் தினமும் வீணாகி, வாய்க்காலில் கலக்கிறது. இதனால் கிராமங்களுக்கு காவிரி நீர் குறைவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், வீணாகும் தண்ணீரை சரி செய்யும் வகையில், விரிசல் அடைந்த குழாயை சீரமைக்க, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை