உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேகத்தடையில் தவறி விழுந்த வாலிபர் பலி

வேகத்தடையில் தவறி விழுந்த வாலிபர் பலி

கரூர், : கரூர் மாவட்டம், ராயனுார் வெங்கடேஷ்வராநகர், இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்த மகாராஜன் மகன் சரவணபாண்டியன், 23; இவர் கடந்த, 16 ல் யமஹா டூவீலரில், கரூர்-ஈசநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, சாலையின் குறுக்கே வேகத்தடையில் டூவீலர் சென்ற போது, நிலை தடுமாறி எதிரே இருந்த மின் கம்பத்தில் மோதியது. அதில், கீழே விழுந்த சரவணபாண்டியன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ