மேலும் செய்திகள்
வெளியூர் செல்லும் சாயல்குடி நிலக்கடலை
09-Jan-2025
மழையால் நிலக்கடலை சாகுபடிஅதிகரிப்பு: கரூரில் விற்பனை 'ஜோர்'கரூ: வடகிழக்கு பருவ மழை காரணமாக, நிலக்கடலை சாகுபடி, கரூர் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.கரூர் மாவட்டத்தில், கடவூர், கிருஷ்ணராயபுரம், தான்தோன்றி மலை மற்றும் கரூர் வட்டாரங்களில், மானாவாரி நிலங்களில் ஆண்டுதோறும், வடகிழக்கு பருவ மழையை கணக்கில் கொண்டு, நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம்.கடந்தாண்டு அக்டோபர் முதல் மழை பெய்ய துவங்கியதால், மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி விறுவிறுப்பாக நடந்தது.தற்போது, அறுவடை துவங்கிய நிலையில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நிலக்கடலை விற்பனை ஜோராக நடந்து வருகிறது. ஒரு படி, 30 முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு, மார்ச் மாதம் நிலக்கடலை வரத்து குறைவால், ஒரு படி, 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, நிலக்கடலை விலை குறைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
09-Jan-2025