உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓட்டல்கள், டீ கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

ஓட்டல்கள், டீ கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

ஓட்டல்கள், டீ கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வுகரூர்:கரூரில், உணவு பாதுகாப்பு துறையினர், நேற்று ஓட்டல்கள், டீ கடைகளில் ஆய்வு செய்தனர்.கரூர் பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, பழைய திண்டுக்கல் சாலை மற்றும் ஜவஹர் பஜாரில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகள் மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களில், நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரை வீரன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது, வயிறு கோளாறுக்கு காரணமான, பூஞ்சைகள் ஏற்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்க கூடாது, விற்பனை செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி தேதி, பயன்படுத்தும் கடைசி தேதி ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும் என, வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தினர்.மேலும், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் உள்ள டீ கடையில், தயாரிக்கப்பட்ட உணவு சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக, உணவு பாதுகாப்பு துறையினர், 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !