உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் நகை திருடிய பெண் கைது

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் நகை திருடிய பெண் கைது

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் நகை திருடிய பெண் கைதுகரூர்:வெள்ளியணை அருகே, ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் தங்க நகையை, திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை தாளியாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நகுல்சாமி, 71; ஓய்வு பெற்ற நீதிபதி. இவரது வீட்டில் அங்காயி என்ற, பெண் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 12ல் அங்காயியை பார்க்க அவரது உறவினர் ரஞ்சிதா, 30, என்பவர் ஓய்வு பெற்ற நீதிபதி நகுல்சாமியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.பிறகு, வீட்டில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த, மூன்று பவுன் தங்க நகையை காணவில்லை. இதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி நகுல்சாமி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில், தங்க நகைகளை திருடியது ரஞ்சிதா என தெரியவந்தது. இதையடுத்து, ரஞ்சிதாவை வெள்ளியணை போலீசார் கைது செய்து, திருடிய தங்க நகைகளை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை