ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் விற்பனைக்கு அழைப்பு
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் விற்பனைக்கு அழைப்புகரூர் :'மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெறலாம்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி, மக்காச்சோளத்தை, கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், குளித்தலை, இரும்பூதிப்பட்டி, சின்னதாராபுரம் ஆகிய, 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்யலாம். இதை, சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மக்காச்சோளத்தை விற்று பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.