உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜெகதாபியில் மின் விளக்கு எரியாததால் மக்கள் தவிப்பு

ஜெகதாபியில் மின் விளக்கு எரியாததால் மக்கள் தவிப்பு

ஜெகதாபியில் மின் விளக்கு எரியாததால் மக்கள் தவிப்புகரூர் : கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜெகதாபி பஞ்சாயத்து, ஐந்தாவது வார்டில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக ஐந்திற்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதாகி உள்ளன. இது குறித்து ஜெகதாபி பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், விளக்குகளை சரி செய்யவில்லை. இதனால், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். பெண்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் அச்சத்துடன் செல்கின்றனர். தெரு விளக்குகளை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி