பசுமை படை சார்பில் சமையல் கலை பயிற்சி
பசுமை படை சார்பில் சமையல் கலை பயிற்சிகரூர்: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றம் துறை, தேசிய பசுமை படை சார்பில், செவந்திப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் கலை பயிற்சி முகாம் நடந்தது.அதில், அடுப்பு இல்லாமல் சமையல் காய்கறி, கலவை பழம், அவல் கலவை தயாரிக்கப்பட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் திலகவதி, ஆசிரியர்கள் அமுதவேல், கண்ணதாசன், சிவகாமி மற்றும் அம்சவள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.