மேலும் செய்திகள்
பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
25-Jan-2025
காரில் துாங்கிய நிலையில்டிரைவர் பரிதாப மரணம்குளித்தலை: காரில் துாங்கிய நிலையில், டிரைவர் பரிதாபமாக இறந்தார்.நாமக்கல் மாவட்டம், ஒடுவந்துார் தெற்கு புதுார் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், 40, டிரைவர். இவர் சொந்தமாக கார் வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த, 18 இரவு, 11:30 மணியளவில் சவாரிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை கல்லப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், அங்கு வேலை பார்ப்பவரிடம் தனக்கு ஒரு மாதிரியாக இருப்பதாக கூறி, கொஞ்ச நேரம் துாங்குவதாக கூறியுள்ளார். மறுநாள் காலை, 10:00 மணியளவில் அங்கே வேலை பார்க்கும் தியாகராஜன் என்பவர், காரை திறந்து பார்த்தபோது ரமேஷ் இறந்துவிட்டதாக, லாலாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.போலீசார் சடலத்தை கைப்பற்றி, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி திவ்யா கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
25-Jan-2025