உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முருங்கை பயிரில் கவாத்து செய்யவேளாண் அலுவலர் யோசனை

முருங்கை பயிரில் கவாத்து செய்யவேளாண் அலுவலர் யோசனை

முருங்கை பயிரில் கவாத்து செய்யவேளாண் அலுவலர் யோசனைஅரவக்குறிச்சி:'முருங்கை பயிரில் கவாத்து செய்வது அவசியம்' என, அரவக்குறிச்சி வட்டார வேளாண் அலுவலர் கண்ணன், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: முருங்கை பயிரில் கவாத்து செய்யும் முறை என்பது, பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தும் முறையாகும். இதன் மூலம் புதிய கிளைகள் மற்றும் பூ மொட்டுகளை துளிர்க்க செய்ய முடியும்.இதனால் அதிகளவில் புதிய காய்கள் வளர உதவும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கவாத்து செய்தால், முருங்கைப் பயிருக்கு நல்லது. ஆண்டிற்கு ஒரு முறை கவாத்து செய்வது அவசியம். குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது, 'கவாத்து' செய்ய வேண்டும். இதனால் காய்ப்பு தன்மை அதிகரிப்பதுடன், காய்களின் தரமும் குறையாமல் இருக்கும்.மரங்களின் பராமரிப்பையும், காய்கள் பறிப்பையும் எளிதாக்கும். கவாத்து செய்யும் போது மரத்தின் நான்கு புற கிளைகளையும் வெட்டி விட வேண்டும். துார் பகுதியில் வெட்டும் போது, இரண்டாக பிளவு பட்டுவிடாமல் வெட்ட வேண்டும். அவ்வாறு பிளவு பட்டால் பிளவு பகுதியில் பூச்சி தாக்குதல் ஏற்படும். மரம் அல்லது செடி நோய் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும்போதும், பாசன நீர் பற்றாக்குறையின்போதும் கவாத்து செய்யக்கூடாது. மேலும், பூ வைத்த பிறகும் கவாத்து செய்யக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !