உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு காலனி பிரிவு சாலையில்உயர்கோபுர விளக்கு தேவை

அரசு காலனி பிரிவு சாலையில்உயர்கோபுர விளக்கு தேவை

அரசு காலனி பிரிவு சாலையில்உயர்கோபுர விளக்கு தேவைகரூர்:-கரூர், வாங்கல் சாலை அரசு காலனி பிரிவு அருகே, உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர், வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனி பிரிவு உள்ளது. கரூரில் இருந்து மின்னாம்பள்ளி, கோயம்பள்ளி, நெரூர், சோமூர், திருமுக்கூடலுார், வேடிச்சிபாளையம், கல்லுப்பாளையம் போன்ற பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், பஸ்கள் அரசு காலனி பிரிவை தாண்டி செல்ல வேண்டும். மேலும் கரூரில் இருந்து வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனுார், சங்கரன்பாளையம் பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கின்றன.அரசு காலனி பிரிவு அருகே, மூன்று வழி போக்கு வரத்து நடைபெற்று வருகிறது. இங்கு, குடியிருப்புகள் உள்ளன. தனியார் பள்ளியும் செயல்படுகிறது. இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து செல்லும் போது, போதிய வெளிச்சம் குறைவு காரணமாக அடிக்கடி விபத்து நடக்கிறது. இங்கு, உயர்கோபுர மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என, அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ