உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குண்டலீஸ்வரர் கோவில் சாலையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை

குண்டலீஸ்வரர் கோவில் சாலையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை

குண்டலீஸ்வரர் கோவில் சாலையை தார் சாலையாக மாற்ற கோரிக்கைகரூர்:கரூர் அருகில் செட்டிப்பாளையத்தில் உள்ள குண்டலீஸ்வரர் கோவில், மிகவும் பழமை வாய்ந்தது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவில் சிறிய மலை குன்றில் அமைந்துள்ளது. இங்கு, முக்கிய தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு செல்ல மண் சாலை வசதி தான் உள்ளது. தற்போது அந்த சாலையும் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. சாலையை ஒட்டி ஏராளமான முள் செடிகள் வளர்ந்து உள்ளது. கார், பைக், உள்ளிட்ட எந்த வாகனங்களிலும் இவ்வழியாக செல்ல முடியாது. மழை பெய்யும் போது மண் சாலை, சேறும் சகதியுமாக காட்சியளிக்கும். இரவு நேரங்களில் டூவீலரில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழும் சம்பவங்கள் நடக்கின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிவறை வசதி போதிய அளவில் இல்லை. கோவிலை சுற்றி முள் செடி புதர் போல வளர்ந்து உள்ளது. விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கோவிலுக்கு செல்லும் சாலையை, தார் சாலையாக மாற்றி அமைக்கவும், பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ