உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தடுப்பு சுவரில் பைக் மோதிபிரியாணி கடை ஊழியர் பலி

தடுப்பு சுவரில் பைக் மோதிபிரியாணி கடை ஊழியர் பலி

தடுப்பு சுவரில் பைக் மோதிபிரியாணி கடை ஊழியர் பலிகரூர்:கரூர் அருகே, தடுப்பு சுவரில் மோதியதில் டூவீலரில் சென்ற பிரியாணி கடை ஊழியர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், டி.செல்லாண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரூபன், 19; ஏ-1 பிரியாணி கடை ஊழியர். இவர் நேற்று முன்தினம் ஸ்பிளண்டர் பிளஸ் டூவீலரில், சுங்ககேட் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, டூவீலர் திடீரென நிலை தடுமாறி எதிரே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. அதில், கீழே விழுந்த ரூபன், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதுகுறித்து, ரூபனின் தாய் சிந்து கொடுத்த புகாரின் படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி