நில புரோக்கர் வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு
நில புரோக்கர் வீட்டில் தங்க நகை, பணம் திருட்டுகரூர்:கரூர் அருகே, நில புரோக்கர் வீட்டில் தங்க நகை, பணத்தை திருடி சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர், கோதுார் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி, 53, நில புரோக்கர். இவர் நேற்று முன்தினம் மதியம், வேலை விஷயமாக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ரவி சென்ற போது, வீடு திறந்திருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 22 பவுன் தங்க நகை, 80 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, நில புரோக்கர் ரவி போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.