பாலம் கட்டுமான பணி நிறைவுஇணைப்பு சாலை அமைக்காததால் அவதி
பாலம் கட்டுமான பணி நிறைவுஇணைப்பு சாலை அமைக்காததால் அவதிகரூர்:உப்பிடமங்கலம் அருகில் வாய்க்கால் மேல் பகுதியில், பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், இணைப்பு சாலை அமைக்காததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் இருந்து வையாபுரிக்கவுண்டனுார் செல்லும் சாலையில் வாய்க்கால் உள்ளது. இங்கு சிறிய பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால், பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் புதிய பாலத்தின் மேல் பகுதியில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.மேலும், அப்பகுதியில் தார்ச்சாலைகளும் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். கிராம பகுதியாக இருப்பதால், இரவு நேரத்தில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். விளை பொருட்களை எடுத்து செல்லும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே, புதிய பாலத்தையொட்டி, உடனடியாக இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.