மாரியம்மன் கோவில் வைகாசி விழா பூச்சொரிதல் ஊர்வலம் தொடங்கியது
கரூர் : கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று இரவு பூச்சொரிதல் ஊர்வலம் தொடங்கியது.கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று இரவு, கரூர் நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து, பூச்சொரிதல் ஊர்வலம் தொடங்கியது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று அதிகாலை, 49 பூச்சொரிதல் ஊர்வலமும், கரூர் நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடங்கி, மாரியம்மன் கோவிலை அடையும். பூச்சொரிதல் ஊர்வலத்தை யொட்டி, கரூர் நகரை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.