கரூரில் உற்சவர் மாரியம்மன் புலி வாகனத்தில் திருவீதி உலா
கரூர்,கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, புலி வாகனத்தில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது.கரூரில் பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. 16ல் பூச்சொரிதல் ஊர்வலம் நடந்தது. அதை தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு விசேஷ வாகனங்களில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று மாலை, புலி வாகனத்தில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.