கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமிகோவில் 8ம் நாள் ராப்பத்து உற்சவம்
கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமிகோவில் 8ம் நாள் ராப்பத்து உற்சவம்கரூர், : கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், நேற்று எட்டாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது.கடந்த டிச., 31ல் வைகுண்ட ஏகாதசி திருவிழா, அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. கடந்த, 9 ல் இரவு மூலவர் மோகினி அலங்காரம், 10 ல் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அதை தொடர்ந்து, ராப்பத்து உற்சவம் தொடங்கியது.நேற்று, எட்டம் நாள் ராப்பத்து உற்சவத்தில், வேடுபறி (குதிரை வாகனம்) வேடத்தில், உற்சவர் அருள்பாலித்தார்.