உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜவஹர் பஜாரில் போக்குவரத்து போலீசாரின் நிழற்கூடம் சேதம்

ஜவஹர் பஜாரில் போக்குவரத்து போலீசாரின் நிழற்கூடம் சேதம்

கரூர்: கரூர் நகரின் வர்த்தக பகுதியாக உள்ள ஜவஹர் பஜாரில், தாலுகா அலுவலகம், தீயணைப்பு அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் கிளைச்சிறை உள்ளது. மேலும், வங்கிகள், மத்திய, மாநில அரசின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஏரா-ளமான வர்த்தக நிறுவனங்களும், ஜவஹர் பஜாரில் உள்ளதால் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படும்.இதனால், போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் தரப்பில், ஜவஹர் பஜாரில் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து போலீசாரின் நிழற்-கூடம் சேதமடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. அதில், போக்கு-வரத்து போலீசார் நின்று கொண்டு, பணியை செய்ய முடிய-வில்லை.எனவே, கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள சேதமடைந்த போக்குவ-ரத்து போலீசாரின், நிழற்கூடத்தை சீரமைக்க, மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை