உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கண்வலி கிழங்கு விதை விற்பனை

கண்வலி கிழங்கு விதை விற்பனை

கண்வலி கிழங்கு விதை விற்பனைகரூர், : ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்வலி கிழங்கு விதை விற்பனை செய்யலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் செங்காந்தள் மலர் விதைகள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கரூர், குளித்தலை, இரும்பூதிப்பட்டி மற்றும் சின்னதாராபுரம் ஆகிய நான்கு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் செங்காந்தள் மலர் என்ற கண்வலி கிழங்கு விதையை விற்பனை செய்யலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி