மோசமான சாலையால் மக்கள் கடும் அவதி
மோசமான சாலையால் மக்கள் கடும் அவதிகிருஷ்ணராயபுரம், :குழந்தைப்பட்டி பகுதி சாலை, மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து, வரகூர் பகுதியில் இருந்து குழந்தைப்பட்டி பகுதி வரை தார் சாலை உள்ளது. இதன் வழியாக ஏராளமானோர் வாகனங்களில் செல்கின்றனர். தற்போது சாலையில், பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் தடுமாற்றமடைந்து, விபத்து களில் சிக்குகின்றனர். எனவே, சாலையை புதுப்பிக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.