உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திறந்து கிடக்கும் சாக்கடையால் ஆபத்து

திறந்து கிடக்கும் சாக்கடையால் ஆபத்து

திறந்து கிடக்கும் சாக்கடையால் ஆபத்துகரூர் : கரூர் சுங்ககேட் அருகில், நடைமேடையை ஒட்டி சாக்கடை கால்வாய் மூடாமல் இருப்பதால், பாதாசாரிகள் விழுந்து விட வாய்ப்பு அதிகம் உள்ளது.கரூர் சுங்ககேட்டில் இருந்து, வெங்ககல்பட்டி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில், 4 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால் கட்டப்பட்டுள்ளது. அதன்மேல் நடைமேடையில், பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. சுங்ககேட் அருகில் அமைக்கப்பட்டுள்ள, நடைமேடையை ஒட்டிய பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூடாமல் திறந்தபடி உள்ளது.இதனால், நடைமேடையில் நடந்து செல்வர்கள் சாக்கடை இருப்பது தெரியாமல் விழும் நிலை ஏற்படும். குறிப்பாக, இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் தவறி விழுவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே, சாக்கடை கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி