முட்புதருக்குள் பொது கழிப்பிடம்பொதுமக்கள் பெரும் அவதி
முட்புதருக்குள் பொது கழிப்பிடம்பொதுமக்கள் பெரும் அவதிகரூர்: கரூர் மாவட்டம், நெரூர் தெற்கு பஞ்சாயத்து, மறவாப்பாளையம் பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடந்த, 2020-21ல் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், அந்த கழிப்பிடம் சில மாதங்களுக்கு முன் சேதம் அடைந்தது. அதை பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யவில்லை. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முள் செடிகள் முளைத்துள்ளன. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கழிப்பிடத்துக்கு செல்ல முடியாமல், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், மறவாப்பாளையம் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சேதம் அடைந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ள, கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, நெரூர் தெற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.