மேலும் செய்திகள்
டூவீலர் மோதி விபத்து நடந்து சென்ற சிறுவன் காயம்
19-Jan-2025
இறந்த மூதாட்டியின் சடலம் அடையாளம் காணப்பட்டது
24-Jan-2025
டூவீலர்கள் நேருக்கு நேர்மோதி ஒருவர் உயிரிழப்புஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், புத்தாம்பூர் அருகே உள்ள காளிபாளையம், குடித்தெருவை சேர்ந்தவர் ராமசாமி, 49. இவரது மகன் யோகபாரதி, 15. இவர்கள் இருவரும், நேற்று காலை 10:30 மணியளவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் ஜவுளி பூங்கா அருகே சென்றபோது, எதிரே மணல்மேடு பகுதியை சேர்ந்த சபரி, 21, என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், ராமசாமி ஒட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில், படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் யோகபாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக ராமசாமி மனைவி சத்யா அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் சபரி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
19-Jan-2025
24-Jan-2025