உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கன்வாடி பள்ளி கட்டடம்கட்ட பொதுமக்கள் கோரிக்கை

அங்கன்வாடி பள்ளி கட்டடம்கட்ட பொதுமக்கள் கோரிக்கை

அங்கன்வாடி பள்ளி கட்டடம்கட்ட பொதுமக்கள் கோரிக்கைகுளித்தலை:குளித்தலை அடுத்த, மேட்டுமருதுார் கிராமத்தில் ஒரே கட்டடத்தில் இரண்டு அங்கன்வாடி பள்ளிகள் செயல்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி கட்டடம் முழுவதும் சேதம் ஏற்பட்டு, அருகில் இருந்த கட்டடத்தின் தரையிலும், திண்ணையிலும் செயல்பட்டு வந்தது.பழைய பள்ளி கட்டடம் சேதம் ஏற்பட்டதால், அப்போதைய கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின்படி அகற்றப்பட்டது. தொடர்ந்து இரண்டு பள்ளிகளும். வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதேபோல், மருதுாரில் செயல்பட்டு வந்த குழந்தைகள் பள்ளி கட்டடம் சேதம் ஏற்பட்டு, குழந்தைகள் அருகில் உள்ள நேரு இளைஞர் நற்பணி மன்ற கட்டடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது.பள்ளி குழந்தைகள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் மூன்று புதிய பள்ளி கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பெற்றோர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ