சேவல் திருடிய வாலிபர் கைது
சேவல் திருடிய வாலிபர் கைதுகரூர்:கரூர் அருகே சேவல், கோழிகளை திருடி சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.தான்தோன்றிமலை காளியப்பனுார் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பிரபு, 37; விவசாயி. இவரது தோட்டத்தில் இருந்த, ஐந்து சேவல் மற்றும் ஆறு கோழிகளை கடந்த, 13ல் காணவில்லை. இதன் மதிப்பு, 49 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து போலீசில் பிரபு புகார் செய்தார். இதையடுத்து, சேவல், கோழிகளை திருடியதாக திண்டுக்கல் மாவட்டம், அய்யன்கோட்டை பகுதியை சேர்ந்த மைதிலிநாதன், 20, என்பவரை, தான் தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.