அகில இந்திய நுழைவு தேர்வுக்குபயிற்சி; விண்ணப்பிக்க அழைப்பு
அகில இந்திய நுழைவு தேர்வுக்குபயிற்சி; விண்ணப்பிக்க அழைப்புகரூர்:தாட்கோ வாயிலாக, அகில இந்திய நுழைவு தேர்வுக்கு வழங்கும் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவு தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த மாணவர்கள், 65 சதவீதம், மற்ற பிரிவு மாணவர்கள், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு, 4 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும்.பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது. பயிற்சி பெற, www.tahdco.comதாட்கோ இணையதளத்தில் முகவரியில் பதிவு செய்ய வேண்டும். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும், நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், தேர்வுக்கு உரிய பயிற்சியில் சேர முடியும்.இத்தகவலை, மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.