கால்நடை தீவனத்துக்காக சோளம்பயிருக்கு உரமிடும் பணி தீவிரம்
கால்நடை தீவனத்துக்காக சோளம்பயிருக்கு உரமிடும் பணி தீவிரம்கரூர்:கரூர் அருகே, அமராவதி ஆற்றுப்பகுதியில் கால்நடை தீவனத்துக்காக, சோளத்துக்கு உரமிடும் பணிகள் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது குறைக்கப்பட்டுள்ளது. சம்பா நெல் அறுவடை நிறைவு பெற்றதால், குறுகிய கால பயிரான சோளம், கால்நடைகளின் தீவனத்துக்காக, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் கடந்த மாதம் பயிரிடப்பட்டது.தற்போது, சோளப்பயிர்கள் முளைத்து வளர்ந்துள்ள நிலையில், கோடை மழையை நம்பி, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்று பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உரமிடும் பணிகள் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சோளப்பயிர்கள் நன்கு வளர உரமிடுதல் அவசியம் என, விவசாயிகள் தெரிவித்தனர்.