மேலும் செய்திகள்
வாலிபரிடம் பணம் பறிப்புஆந்திர தம்பதியர் கைது
08-Mar-2025
அரிவாளை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறிப்புகுளித்தலை:குளித்தலை அடுத்த சிந்தலவாடி பஞ்., மேலவிட்டுக்கட்டியை சேர்ந்தவர் சரவணன், 32; இவர், நேற்று முன்தினம், சிந்தலவாடி பிரிவு சாலை அருகே, நண்பர்கள் சிவகுரு, ராஜா ஆகியோருடன் நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர், முகவரி கேட்பதுபோல் சரவணனிடம் பேச்சுகொடுத்துள்ளார். திடீரென பைக்கில் இருந்து அரிவாளை எடுத்து சரவணனின் கழுத்தில் வைத்து, பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுக்கச் சொல்லி மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது, சரவணன் வாங்கிய சம்பளம், 9,000 ரூபாயை பிடுங்கி கொண்டு, மிரட்டல் விடுத்தபடியே தப்பி சென்றார்.மூவரும், லாலாப்பேட்டை போலீ சில் புகாரளித்தனர். விசாரணையில், துாத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளை ஊரணி, மேற்கு காமராஜர் நகரை சேர்ந்த எட்வின் ராஜா, 35, என்பவர், பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
08-Mar-2025