உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்புகரூர், க.பரமத்தி அருகே, பராமரிப்பு இல்லாமல் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும்.க.பரமத்தி அருகே பவித்திரம் பஞ்.,ல், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது. அதில், சிறுவர், சிறுமியர் விளையாட வசதியாக, விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி செய்ய தனியாக சாதனங்கள் இருந்தன. இந்நிலையில், பூங்காவில் தற்போது விளையாட்டு உபகரணங்கள், சாதனங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது.அதை, சிறுவர்களால் பயன்படுத்த முடியவில்லை. அந்த பகுதியில், வேறு பொழுது போக்குக்கான இடம் இல்லாததால், பூங்காவில் உள்ள பழுதான உபகரணங்களை, உடனடியாக சரி செய்ய, பவித்திரம் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை