மேலும் செய்திகள்
பங்குனி உத்திர திருவிழா உற்சவர் திருவீதி உலா
08-Apr-2025
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி, நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. அதை தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா, சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று காலை, பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று தீர்த்தவாரி, நாளை ஆளும் பல்லக்கு, வரும் 14 ல் ஊஞ்சல் உற்சவம், 15 ல் வெள்ளி வாகனத்தில், உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.மேலும், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புகழூர் பாலசுப்பிரமணி சுவாமி கோவில்களிலும், மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. பின், மஹா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.* கிருஷ்ணராயபுரம், தண்டாயுதபாணி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், வாசனை திரவிய பொடிகளால் அபிேஷகம் செய்து, மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக அலங்கார ரதத்தில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
08-Apr-2025