கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா
கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழாகரூர்,:கரூர் அரசு கலைக்கல்லுாரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறை சார்பில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது.அதில், கல்லுாரி மாணவியர் பொங்கல் வைத்து, சக மாணவர்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் சுதா, பேராசிரியர்கள் கார்த்திகேயன், ஜாகீர் உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.* கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. அதில், மருத்துவ கல்லுாரி டீன் லோகநாயகி மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.அதேபோல், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியிலும், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தலைமையாசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.