உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் திருட்டு; டிரைவர் புகார்

பைக் திருட்டு; டிரைவர் புகார்

பைக் திருட்டு; டிரைவர் புகார்கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, பைக்கை காணவில்லை என, போலீசில் டிரைவர் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அதியமான் கோட்டையை சேர்ந்தவர் சங்கர், 45, டிரைவர். இவர் கடந்த, 21 மாலை குழந்தைபாளையம் பகுதியில், மணிகண்டன் என்பவரது வீட்டின் முன், ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, சங்கர் அளித்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி