ஸ்டிபோ சிஸ்டம்ஸ் ஹேக்கத்தான் போட்டி
ஸ்டிபோ சிஸ்டம்ஸ் ஹேக்கத்தான் போட்டிஎம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரி மாணவர் சாதனைகரூர்:இந்திய அளவில் நடந்த, ஸ்டிபோ சிஸ்டம்ஸ் ஹேக்கத்தான் போட்டியில் வென்று, கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லுாரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியின் இயந்திரவியல் துறையில், இறுதியாண்டு பயிலும் மாணவர் தினோ கெவின், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கி, ஐ.ஐ.டி.,யில், இந்திய அளவில் நடந்த ஸ்டிபோ சிஸ்டம்ஸ் ஹேக்கத்தான்-2025ல் போட்டியில் கலந்து கொண்டார். இதில், மென்பொருள், ஆப் டெவலப்மென்ட், இணையதளம் உருவாக்கம், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், ப்ளாக்செயின் போன்ற பல தொழில்நுட்பத் துறைகளில் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில், மொத்தம் ஐந்து சுற்றுகள் நடைபெற்றன.அதில் இறுதி சுற்றில், 1,800 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து, 50,000 ரூபாய் பரிசை மாணவர் தினோ கெவின் பெற்றார். இதையடுத்து, கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன், கல்லுாரி இணை செயலாளர் சரண்குமார், நிர்வாக இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.