உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடன் தொல்லையால் விரக்திவிவசாயி விபரீத முடிவு

கடன் தொல்லையால் விரக்திவிவசாயி விபரீத முடிவு

கடன் தொல்லையால் விரக்திவிவசாயி விபரீத முடிவுகுளித்தலை: குளித்தலை, சுங்ககேட் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள மரத்தில், நேற்று காலை ஒருவர் கயிற்றால் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார்.காலையில் காவிரி ஆற்று பக்கம் சென்றவர்கள் கொடுத்த புகார்படி, சம்பவ இடத்துக்கு குளித்தலை போலீசார் வந்தனர். இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர், குளித்தலை பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி முருகானந்தம், 50, என்பது தெரியவந்தது. இவர், ஷேர் மார்க்கெட்டில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. இந்நிலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததுஅவரது மனைவி வனிதா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி