உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மீது டிராக்டர்மோதி விவசாயி பலி

பைக் மீது டிராக்டர்மோதி விவசாயி பலி

பைக் மீது டிராக்டர்மோதி விவசாயி பலிகுளித்தலை:குளித்தலை அருகே, பைக் மீது, டிராக்டர் மோதி விவசாயி பலியானார்.குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல், 59. விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை, 9:00 மணியளவில் ஹீரோ ஹோண்டா பைக்கில் வீட்டிலிருந்து பணிக்கம்பட்டிக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அய்யர்மலை - குமாரமங்கலம் நெடுஞ்சாலை, வளையப்பட்டி காத்தவராயன் கோவில் அருகில், எதிரே வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் முத்துவேலுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.அவரது மனைவி கல்பனா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் டிராக்டர் டிரைவர் மைலாடும்பாறை கிராமத்தை சேர்ந்த செந்தில், 37, மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை