உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோடைகால நீர் மோர் பந்தல் திறப்புவிழா

கோடைகால நீர் மோர் பந்தல் திறப்புவிழா

கோடைகால நீர் மோர் பந்தல் திறப்புவிழாகுளித்தலை,:குளித்தலை அடுத்த, தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் அருகில், தமிழ் சங்கம் அமைப்பின் சார்பில், கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ் சங்கத்தின் கவுரவ தலைவர் சந்தீப்குமார் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் காந்தியராஜன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி, இளநீர், நீர் மோர் பானகம், வெள்ளரிக்காய் ஆகியவைகளை பொது மக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்.ஐ., குமரவேல், முன்னாள் யூனியன் குழு துணைத்தலைவர் சின்னவழியான், தமிழ் சங்க நிர்வாகிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ